tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல்

கோவை மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 10 –  தில்லி ஜவகர்லால் நேரு பல்க லைக்கழக மாணவர்கள் மீது தாக்கு தல் நடத்திய ஏபிவிபி அமைப்பினை சேர்ந்தவர்களை உடனே கைது செய்ய  வலியுறுத்தி மாணவர் கூட்டமைப் பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற் றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்கு தல் நடத்தினர். அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா  கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகா யமடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்கு தலை கண்டித்து நாட்டின் பல இடங்க ளில் போராட்டங்கள்  நடந்து வருகின் றன.இதன்தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எ ஸின் மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும், சிஏஏ மற்றும் என்ஆர்சி யை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில்  மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவத்தனர். ஆனால் மாணவர்கள் கண்டுகொள்ளாமல் தேசிய கீதத்தை பாடி நிறைவு செய்தனர்.

;