சிஐடியு பிரச்சார இயக்கம்
சேலம், நவ. 25- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சேலம் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியுவின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோத போக்குகளைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்க்கும் முடிவினை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்கிட வேண்டும். விவசாயி களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சேலம் ரயில்வே கூட்செட், லாரி மார்க்கெட், நெத்தி மேடு, தாதகாப்பட்டி, பழைய, புதிய பேருந்து நிலையம், ஜங்சன், அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் சிஐடியு சங்கத்தி னர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எஸ். கே. தியாகராஜன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர் .வைரமணி, மாவட்ட துணை செயலாளர் ஏ. கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் பி.சந்திரன், விஜய லட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, செம்பான் எம்.குணசேகரன் உள்ளிட்டு பலர் பங்கேற் றனர். மேட்டூர் பகுதியில் நடைபெற்ற பிரச் சார இயக்கத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சி.கருப்பண்ணன் தலைமை தாங்கினார். இப்பிரச்சாரத்தை சிபிஎம் மேட்டூர், கொளத்தூர் கமிட்டி செயலாளர் வசந்தி துவக்கி வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, நீர் மின் உற்பத்தி செயலாளர் பி.கே. சிவகுமார், மேட்டூர் மின் திட்ட தலைவர் கே. சுந்தர் ராஜன், மேட்டூர் அனல் கிளை தலைவர் எஸ்.செல்வகணபதி, கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கோவிந் தராஜ், அரசு போக்குவரத்து சங்க மேட்டூர் செயலாளர் சுப்பிரமணியன், உள்ளாட்சி சங்க துணை தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.