வத்தல்மலையில் அறிமுகம் - தலைமை செயலர் தகவல்
தருமபுரி, நவ. 25- ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு திட்டத்தை வகுத்து வளர்ச்சி பெறச் செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என வத்தல் மலையில் அரசு தலைமை செய லர் சண்முகம் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலா ளர் க.சண்முகம் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வத்தல்மலையில் நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரை யாடலில் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ஒரு திட்டத்தை அரசு வகுத்து விட்டு அது விவசாயிகளிடம் மாற்றம் ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதை விட, அதற்கு மாற்றாக, விவசா யிகளை ஆதாரமாகக் கொண்டு அவர்களிடம் இருந்தே ஒரு மாற் றத்தை ஏற்படுத்தும் வகையிலான திட்டத்தை வகுத்தால் அது சிறந்த பலனை தரும்.
அதன்படி ஒவ்வொரு விவசா யிக்கும் அவர்களின் பண்ணை சார்ந்த வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் வத்தல்மலையில் தொடங்கப்பட்டுள்ளது. விவசா யிகளின் நில அமைப்பு, குடும்பச் சூழல் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு இந்த திட்டம் முன்மாதிரியாக புதிய முயற்சியை வத்தல்மலையில் தொடங்கியுள் ளோம். வத்தல்மலை பகுதியில் உள்ள விவசாயிகளை சார்ந்து ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு வளர்ச்சி திட்டத்தை வகுத்து, அவர்களை ஒருங்கிணைத்து அதற்கு தேவைப்படும் நிதியை வழங்கி கூட்டுப்பண்ணை முறை, ஒருங்கிணைந்த பண்ணை முறை ஆகிய திட்டங்கள் மூலம் விவசா யிகள் பயன்பெறும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை யும் விவசாய பணிகளுடன் இணைத்து விவசாயிகள் செயல் படும்போது அவர்களுக்கு தொடர்ந்து வருவாய் கிடைக்கும் நிலை ஏற்படும். தற்போது கிடைத்து வரும் வருவாயை விட இரண்டு மடங்காக வருவாய் அதிகரிக்கும். விவசாய துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் ஓய்வுபெற்ற வேளாண்துறை அலுவலர்களின் கூட்டு முயற்சி யில் இந்த திட்டம் உருவாக் கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டு களுக்கு இந்த முயற்சி மேற்கொள் ளப்படும். இது வெற்றிகரமாக அமையும்போது, வத்தல் மலையை முன்மாதிரியாகக் கொண்டு இதர பகுதிகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சூழல் சுற்றுலா
மேலும், வத்தல்மலையில் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வத்தல் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலை மழைக் காலங்களில் சரிந்து விழுகிறது. இதை சீரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள் ளப்பட்டு சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும். இது விவசாயிகள் பயன்பெறும் வகையில் பண்ணை சார்ந்த சுற்றுலாவாகவும் அமை யும். நகர்ப்புறத்தில் இருப்ப வர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சூழல் சுற்றுலா அமையும். இயற்கை வளம் மிக்க வத்தல்மலை பகுதியை அதே இயற்கை வளம்மிக்க பகு தியாகவே சுற்றுலா தலமாகவும், இங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத் தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ் வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வரு வாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், அரூர் சார் ஆட்சியர் மு.பிர தாப், மாவட்ட வருவாய் அலுவ லர் அழகிரிசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொ) தேன் மொழி, ஆகியோர் பங்கேற் றனர்.