tamilnadu

அதிமுகவிற்கு ஆதரவு இல்லை கம்ம நாயுடு எழுச்சி பேரவை அறிவிப்பு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவ்மைப்பின் மாநிலத் தலைவர் வி.கே.சுப்புராஜ், மாநிலச் செயலாளர் சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர் என். சுரேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை அதிமுகவிற்கு ஆதரவு என நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு சிலர் சொல்லி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது. இச்செயல் தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவையை கட்டுப்படுத்தாது. மேலும், நடைபெறும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தமிழ்நாடு கம்மா நாயுடு எழுச்சி பேரவையின் ஆதரவு இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.