tamilnadu

img

நிலையான வளர்ச்சி மற்றும் புனரமைப்பில் பெரும் சாதனை படைந்துள்ள கேரள அரசு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை

திருவனந்தபுரம், ஜன.29- கேரளத்தின் புனரமைப்பு, நிலை யான வளர்ச்சியிலும் பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனைகளை படைக்க கேரள அர சால் சாத்தியமாகிஉள்ளது. அதன் பயனாக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டிலும் நிலையான வளர்ச்சிக்கான நீதி ஆயோக் கின் பட்டியலில் முதலிடத்தை கேரளம் பிடித்துள்ளது என்று கேரள சட்ட மன்றத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமது கான் குறிப்பிட்டார். மாவட்ட கூட்டு றவு வங்கிகளை ஒருங்கிணைத்து கேரள வங்கியை உருவாக்கியது பெரும் முன்னேற்றம் எனவும் அவர் கூறினார்.  உள்ளாட்சி அமைப்புகளை உட் படுத்தி ‘நாம் நமக்காக’ என்கிற பிரச்சாரத்தின் ஊடாக இதை ஒரு மக்கள் நிறுவனமாக மாற்ற அரசு முயற்சிக்கிறது.மாநிலத்தின் புனரமைப்புக்காக வெளிநாட்டு நிபுணர்க ளின் கருத்துகளை அரசு கேட்டறிந்தது. பேரழிவைத் தடுக் கும் மாநிலத்தை உரு வாக்குவதற்கு இது ஒரு மதிப்புமிக்க வழிகாட்டியாக இருக்கும். கேரள உட் கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கிப்பி) கட்டமைப்பு செயல்பாடுகளுக்காக வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்ய உறுதி யளித்துள்ளது. அதன்படி அரசின் ரூ.50ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்க ளுக்கு கிப்பி அங்கீகாரம் அளித்துள்ளது

லைப் மிஷனில் 2 லட்சம் வீடுகள்
லைப் மிஷன் திட்டத்தில் 2 லட்சம்வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது. பொதுக்கல்வியிலும் பொதுமக்களுக்கான சுகாதாரத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்துள்ளது. ஆர்த்தவம் திட்டம், பசுமை இயக்கம், ஆறுகளுக்கு புத்து யிரூட்டுவது போன்றவை குறிப்பிடத் தக்கவை. அவசர காலங்களில் மாநிலத்தின் பாதுகாப்புக்காக களமிறங் கும் சமூக தொண்டர் படை, இளம் தலைமைத்துவ அகாடமி, பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் ஏற்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.961 கோடி மதிப்பீட்டிலான ‘முதலமைச்சர் உள் ளூர் சாலை புனரமைப்பு திட்டம்’ பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.  முதலீட்டை ஈர்க்க ஒப்புதலுக்கான நடை முறை எளிதாக்கப்பட்டது. தொழில் துறை யில் சிறப்பு தொகுப்பு திட்டம் அமல் படுத்தப்பட்டது. இவற்றை செயல்படுத்தும் போதும் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாதவகையில் மந்தநிலையை எதிர்கொள்கிறது. மாநிலங்களின் வருமான திறன்குறைந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அதைப் புரிந்து கொள்ளவில்லை. இது மாநில அரசுக்கு ஏமாற்றமளிக்கிறது. ரூ .10,000 கோடி பொதுக் கடனை எடுக்க மாநிலத்திற்கு தகுதியுள்ளது. ஆனால் ரூ.1,900 கோடிக்கு மட்டுமே மத்திய அரசு அனு மதி அளித்தது.  கணிக்க முடியாத காலநிலை மாற் றம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை பேரழிவு களை எதிர் கொள்ளும் பயிர்களை வளர்ப்ப தற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பழங்குடியினர் பகுதிகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். கால் நடைகளுக்கு விரிவான காப்பீடு வழங்கப்படுகிறது. நடமாடும் கால் நடை மருத்துவ பிரிவுகள் மற்றும் மருந் தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தகவல் வழங்கல் மற்றும்  மீட்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீன்வள நிலையங்கள் அமைக்கப்படும். தொழில் மற்றும் வர்த்தகம், வீட்டுவசதி, உயர் கல்வி, ஆயுஷ், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பெரும் முன்னேற்றத்தை அரசு ஏற்படுத்தி யுள்ளது என்று ஆளுநர் கூறினார்.

;