tamilnadu

img

இருட்டி யாகூப் கொலை வழக்கு: 5 ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு ஆயுள்

தலச்சேரி, மே 23-சிபிஎம் ஊழியரான இருட்டியைச் சேர்ந்த யாகூப் (24) குண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கேரள மாநிலம் தலச்சேரி அருகில் உள்ளஇருட்டி பகுதியை சேர்ந்தவர் யாகூப். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர். 2006 ஜுன் 13 ஆம் தேதி இரவு தோழரான பாபுவின் வீட்டில் ஷாநவாஸ், சுதீஷ், சுபாஷ்,  ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்கு பின்புறம் சூழந்து கொண்ட ஒரு கும்பல் கொடிய ஆயுதங்களால் தாக்கியும் தப்பி ஓடியபோது குண்டு வீசியும் கொலை செய்தனர். நண்பர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர கொலையை செய்ததாக  பேராவூர் பிரகதி கல்லூரி முதல்வரும், ஆர்எஸ்எஸ் முன்னாள் தாலுகா தலைவருமான சங்கரன் (48), இவரது சகோதரனும் பாஜக மண்டல தலைவருமான மனோகரன் என்கிற மனோஜ் (42), ஆர்எஸ்எஸ் முன்னாள் தாலுகா நிர்வாகியும், கேஎஸ்ஆர்டிசி நடத்துநருமான டி.பி.விஜேஷ் (38), கோடேரி பிரகாசன் என்கிற ஜோக்கர் பிரகாசன் (48), பிரகதி கல்லூரி முன்னாள் ஆசிரியரும், ஆர்எஸ்எஸ் முன்னாள் தாலுகாநிர்வாகியுமான பி.காவியேஷ் (40) ஆகிய 5 நபர்களையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் அவர்கள் ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து புதனன்று (மே 22) தீர்ப்பளித்தது.