மூணார், ஆக.9- மூணார் ராஜமலை பெட்டிமுடி நிலச்சரி வில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 35 பேரை தேடும் பணி தொடர்கிறது. கடந்த வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களில் 18 சடலங்கள் மீட்கப்பட்டன. சனி யன்று உடற்கூறாய்வு செய்யப்பட்ட 17 சட லங்கள் எரியூட்டப்பட்டன. கோவிட் நடை முறைகள் பின்பற்றி ஒரு இடத்தில் 2 குழி கள் தோண்டி சடலங்கள் எரியூட்டப்பட்டன. வெள்ளியன்று மாலை நிறுத்தப்பட்ட காணாமல் போனவர்களை தேடும் பணி சனியன்று காலை மீண்டும் தொடங்கியது. 5 மண் தோண்டும் இயந்திரங்கள் மூலம் மண்ணும் கல்லும் நீக்கம் செய்யப்பட்டன. காலையில் மழை குறைந்தது தேடுதலுக்கு உதவியது என்றாலும் பிற்பகல் முதல் மழை அதிகரித்தது. அருகில் உள்ள லயங்களில் வசிப்போ ரின் உதவியுடன் தேடும் பணி ஞாயிறன்றும் தொடர்ந்தது. மண்ணுக்கடியில் புதைந்த இடங்களை கண்டறிந்து தேடுதல் நடந்தது. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் கற்களுக்கு அடியிலிருந்து சில சடலங்கள் மீட்கப்பட்டன. ஏராளமான சடலங்கள் சேறுக் கும், பாறைகளுக்கும் அடியில் சிக்கியிருக்க லாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். பெரிய பாறாங்கற்களை வெடிவைத்து அகற்றவும் முயன்றனர். அருகில் உள்ள ஆற்றிலும் தேடுதல் நடைபெற்றது. மீட்கப்பட்ட சடலங்கள் சுத்தம் செய்யப் பட்டு ராஜமலை நயமக்காடு மருத்துவமனை யில் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. கண் ணன்தேவன் தேயிலை தோட்டத்தில் அவை எரியூட்டப்பட்டன. அமைச்சர்கள் எம்.எம்.மணி, இ.சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
கோளஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் 3 பேர்
மூணார் ராஜமலை பெட்டிமுடியில் ஏற் பட்ட நிலச்சரிவில் காயமடைந்து கோலஞ் சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்ட பழனியம்மா (50) ஆபத்தான நிலை யில் உள்ளார். பெட்டிமுடியைச் சேர்ந்த சரஸ் வதி (52), நயம்காடு தோட்டத்தைச் சேர்ந்த சீதலட்சுமி (33) ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடலின் பல பகுதிகளிலும் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். சரஸ்வதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.