tamilnadu

img

இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானுக்கு ஓராண்டு தடை

இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானிடம் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான அவருக்கு ஓராண்டு தடைவிதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு டோக்யோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.