tamilnadu

img

குறுஞ்செய்தி தகவல்கள் அவுட் பாக்., கிரிக்கெட் வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடனே வெளியேறினாலும், அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றார்.  உலகக்கோப்பை தொடரில் பாகிஸ் தான் ஹீரோ இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமடைந்த இமாமிற்கு வாட்ஸ் அப் செயலி சிக்கலை உருவாக்கி யுள்ளது. இமாம் பெண்களுடன் சாட்டிங் (குறுஞ்செய்தி) செய்த முகப்பு பக்கம் (ஸ்கிரீன் ஷாட்டுகள்) இணையத்தில் லீக்  ஆக அதை ஆன்லைன் ஆர்மிகள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் செய்து விட்டனர். தற்போதைய சூழ்நிலையில் இமாமின் சாட்டிங் விவகாரம் தான் பாகிஸ்தானில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விவ காரம் தொடர்பாக இமாம் தரப்பிலிருந்து இது வரை எந்த விளக்கமும் கொடுக்கப்பட வில்லை. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக்கின் உறவினர் தான் இமாம் உல் ஹக் என்பது குறிப்பிடத்தக்கது.