ஐரோப்பா கண்டத்தில் முன்னணிகிளப் கால்பந்து தொடரான பிரெஞ்சு கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பலமான பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணியை, ரேன்னஸ் அணி 6-5 (பெனால்டி ஷூட் அவுட்) என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாம் இடம் பிடித்தோருக்கான பதக்கத்தை பெற்றுக்கொண்டு பி.எஸ்.ஜி அணி வீரர்கள் சோகமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.கேலரி பகுதியில் நின்றுகொண்டிருந்த ரசிகர் ஒருவர் பி.எஸ்.ஜி வீரர்களை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.நெய்மரையும் அந்த ரசிகர் வீடியோ எடுக்க முயன்றார்.திடீரென அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு அவரின் முகத்தில் நெய்மர் குத்துவிட்டார்.ரசிகர் சுதாரித்துக்கொண்டதால் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த விவகாரம் குறித்து பிரெஞ்சு கால்பந்து நிர்வாகம் துரித விசாரணையில் களமிறங்கி நெய்மர் செய்தது தவறு எனஅறிவித்து கடும் எச்சரிக்கையுடன் மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.