tamilnadu

img

முதல் ஓவரிலே சாதனை 

உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க ஓவரில்  சுழற்பந்துவீச்சை தேர்வு செய்து கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. வேகப்பந்துவீச்சை களமிறக்காமல் கேப்டன் இம்ரான் தாஹீரை களமிறக்கினார். கேப்டன் அளித்த வாய்ப்பை வீணடிக்காமல் இங்கிலாந்து வீரர் பேர் ஸ்டோவை அதே ஓவரிலேயே வெளியேற்றினார்.  இதன் மூலம் உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஓவரில் (தொடரின் முதல் ஓவர்) சுழற்பந்துவீச்சை களமிறக்கி முதல் அணி, பந்துவீசியது மட்டுமல்லாமல் முதல் ஓவரில் விக்கெட்டும் வீழ்த்திய இம்ரான் தாஹீர் ஆகிய சிறப்பம்சங்களுடன் சாதனை படைக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கிலாந்து அணி திணறினாலும் ரன் மழை பொழிந்தது.