tamilnadu

img

சம்பள விவரத்தை வெளியிட்ட பாக்., பயிற்சியாளர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், தேர்வுத்துறைத் தலைவர் என இரண்டு பொறுப்புகளைத் தனிநபராகக் கவனித்து வரும் அந்நாட்டு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் உலகின் வலுவான அணியாக வளர பல்வேறு சீர்திருத்தங்களைக் கையாண்டு   வருகிறார்.  2 முக்கிய பொறுப்புகளை மிஸ்பா வகித்து வருவதால் அவரது சம்பள விவரம் தொடர்பாகப் போலிச் செய்திகள் அதிகம்  வெளியாகியது. இந்த போலிச் செய்தி களால் பொறுமை இழந்த மிஸ்பா தனது சம்பளம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ஜியோ செய்தி நிறுவன த்திற்கு மிஸ்பா அளித்த பேட்டியில்,”இரட்டை பதவி வகித்தாலும் முந்தைய பயிற்சியாளர் பெற்ற வருமானத்தைத் தருமாறு கேட்டேன். அதன்படி மாத வருமானமாக ரூ.28 லட்சம் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் ரூ.3.4 கோடி பெறுகிறேன்” எனக் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகில் பயிற்சியாளர் ஒருவர் தனது சம்பள விவரங்களை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். உலகளவில் அதிக சம்பளம் பெரும் பயிற்சியாளர் வரிசை யில் மிஸ்பா தற்போது 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (ஆண்டுக்கு ரூ.9.5 கோடி முதல் ரூ.10 கோடி) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.