ரோஸ் பவுல் (சவுதாம்ப்டன்)
நவீனக் காலத்தில் (2001) உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 25,000 பேர் போட்டியை ரசிக்கலாம்.பெவிலியன் பிரிவுகளில் சிறப்பு வசதி இருப்பதால் கூடுதல் ரசிகர்களும் போட்டியைக் கண்டுகளிக்கலாம். தன்மை : பேட்டிங்கிற்கு சாதகமாக இருக் கும். பிட்ச் பகுதி மந்தமாக இருந்தாலும் இரண்டு விதமான பந்துவீச்சுகளும் எடுபடும்.ரிவர்ஸ் ஸ்விங் அதிகமாக எழும்பும்.இங்கிலாந்து வீரர்கள் இந்த மைதானத்தில் ஆதிக்கம்செலுத்துவார்கள்.ஒருநாள் போட்டிகளை விடடெஸ்டிற்கு நன்கு ஒத்துழைக்கும்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா (ஜூன் -5)
தென் ஆப்பிரிக்கா – விண்டீஸ் (ஜூன் -10)
இங்கிலாந்து – விண்டீஸ் (ஜூன் -14)
இந்தியா - ஆப்கானிஸ்தான் (ஜூன் -22)
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் (ஜூன் - 24)
கார்டிப் - வேல்ஸ்
பிரிட்டனில் அங்கம் வகிக்கும் வேல்ஸ் நாட்டில் அமைந்திருக்கும் இந்த மைதானம் 1967-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.மிகச்சிறிய அளவில் இருப்பதால் 15,000 பேர் மட்டுமே போட்டியை ரசிக்கலாம். தன்மை : ரன் குவிப்பிற்குச் சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணி நன்றாக விளையாடும்.வேகப்பந்துவீச்சு அதிகம் எகிறினாலும் சுழற்பந்து வீச்சு முன்னணியில் இருக்கும்.சீதோஷ்ண சூழ்நிலைக்கு ஏற்ப பவுன்சர் அதிகமாக எழும்பும். டாஸ் வெல்லும் அணி ரன் குவிப்பில் சாதனை படைக்கும்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
நியூஸிலாந்து - இலங்கை (ஜூன் - 1)
ஆப்கானிஸ்தான் - இலங்கை (ஜூன் -4)
இங்கிலாந்து - வங்கதேசம் (ஜூன் - 8)
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் (ஜூன் -15)
கவுண்டி - டவுன்டன் (இங்கிலாந்து)
இங்கிலாந்து நாட்டின் பழமையான மைதானங்களில் இதுவும் ஒன்று.1882-இல் கட்டப்பட்டஇந்த மைதானத்தில் அதிகபட்சம் 7000 பேர்போட்டியை ரசிக்கலாம்.உலகக்கோப் பைக்குச் சிறப்பு இருக்கை வசதி குறித்த விவரம் தெரியவில்லை. தன்மை: பேட்டிங்கிற்கும், வேகப்பந்துவீச் சிற்கும் நன்கு ஒத்துழைக்கும். பிட்ச் பகுதியில் புற்கள் சற்று அதிகமாக இருப்பதால் சுழல்எடுபடாது.சாதாரண வேகத்தில் வீசப்படும் பந்துகள் கூட நெஞ்சிற்கு மேல் எகிறும்.பிட்ச்மையத்தை நன்கு கண்காணித்தால் ரன் குவிப்புமூலம் வாணவேடிக்கை நிகழ்த்தலாம்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து (ஜூன் -8)
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (ஜூன்- 12)
விண்டீஸ் - வங்கதேசம் (ஜூன் -17)