tamilnadu

img

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று இந்தியா - கத்தார் ஆட்டம் டிரா

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் 2022-ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், தரவரிசையில் 103-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் வீழ்ந்தது. செவ்வாயன்று கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆசியாவில் பலம் வாய்ந்த அணியான கத்தாரை இந்திய அணி எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் தடுப்பாட்ட பிரிவில் சொதப்பி வெற்றியைக் கோட்டை விட்ட இந்திய அணி, கத்தார் அணிக்கெதிரான ஆட்டத்தில் இரும்பு கோட்டையை உருவாக்கியது போல தற்காப்பு ஆட்டத்தில் அசத்தியது. சொல்லப்போனால் இந்திய அணி கோல் அடிக்கவில்லை, கத்தார் அணியைக் கோல் போடவும் விடவில்லை. இரு அணிகளும் இறுதிவரை கோலடிக்காமல் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மூன்றாவது தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் இந்த ஆட்டம் மேற்கு வங்கத்தில் (உப்பு ஏரி மைதானம்) நடைபெறுகிறது.