games

img

தோஹாவில் நிறுவப்பட்ட உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுன் கடிகாரம் 

இன்னும் ஒரு வருடத்தில் 2022 நவம்பர் 21 அன்று கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தோஹாவில் உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுன் கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.   

44 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் என நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.  

இதனைத் தொடர்ந்து, இன்னும் ஒரு வருடத்தில் உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதால் தோஹாவில் உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுன் கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.இதுவரை கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திய நாடுகளிலேயே மிகச்சிறியது கத்தார் தான். இதற்கு முன்பு கத்தாரை விட மூன்று மடங்கு பெரிய நாடான ஸ்விட்சர்லாந்து 1954-ல் உலகக் கோப்பையை நடத்தியது. ஆனால் அப்போது 16 அணிகளே பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.