புதுதில்லி,ஜன.12- மத்திய பிரதேசத்திலுள்ள வைரச்சுரங்கத்தில் வைரங் களை வெட்டி எடுக்கும் பணி ஒப்பந்தம் மத்திய அரசின் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்துக்கு கிடைத் துள்ளது. ஆசியாவின் ஒரே வைரச் சுரங்கமான மத்தியப் பிர தேசத்திலுள்ள வைரச்சுரங்கத்தில் வைரங்களை வெட்டி யெடுக்கும் பணிகளை ரியோ டிண்டோ நிறுவனம் மேற் கொண்டு வந்தது. கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் அங்கி ருந்து 10 லட்சம் காரட் அளவுக்கு வைரங்கள் எடுக்கப் பட்டுள்ளன. ஆனால் பலவகையான விலங்குகள் வசிக்கும் வனப் பகுதியில் சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததால் சுரங்கத்தை விரிவுபடுத்த முடியாமல் பணிகளை கைவிட்டது. இதனால் ரியோ டிண்டோ நிறுவனம் கைவிட்ட பணி களுக்கான ஒப்பந்தம், தற்போது தேசிய கனிமவள மேம் பாட்டுக் கழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான காரட் அளவுக்கு வைரங்கள் கிடைக்க லாம் என்று கூறப்படுகிறது.