புதுதில்லி:
வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக் கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய மத்தியஅரசு தடை விதித்தது.
இந்நிலையில் ஏ.சி. மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்க வரிஅதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில்,இறக்குமதியை ஒழுங்குபடுத்த வும் திட்டமிடப்பட்டது.இந்நிலையில், குளிரூட்டி களுடன் கூடிய ஏர் கண்டிஷனர் களை இறக்குமதி செய்ய மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து, வெளிநாட்டுவர்த்தக இயக்குநரகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.