tamilnadu

img

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு ஆதரவாக சிபிஎம் பொதுக் கூட்டம் நடைபெற்றது

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரந்தகம் பகுதிக்குழு சார்பில் படாளம் கூட்டுச்சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, திமுக ஒன்றிய செயலாளர் சத்தியசாய், விசிக ஒன்றிய செயலாளர் முகிலன், மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் இந்திரா, பொன்னுசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் பேசினர்.