காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் ஊராட்சியில் வசித்துவரும் 38 பழங்குடியின இருளர் மக்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் சங்கத்தின முயற்சியால் குடிமனை பட்டா, இலவச மின்சாரம் பொற்றுத் தரப்பட்டது. இதற்கான குடிமனை பட்டாவை மலைவாழ்சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பயனாளிகளிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்கத்தின் வட்ட நிர்வாகிகள் இ.லாரன்ஸ், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.