tamilnadu

img

கரூரில் இன்று  புத்தகத் திருவிழா துவக்கம் 

 கரூர், ஜூலை 18- கரூரில் புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. இது குறித்து புத்தகக் கண்காட்சியின் குழு தலைவர் ப.தங்க ராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகத் திரு விழா கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.  புத்தக திருவிழாவை தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முனைவர் மருதாச்சல அடிகளார் ஆகியோர் திறந்து வைக்கிறார். ஆட்சியர் த.அன்பழ கன் தலைமை வகிக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் சூரிய பிரகாஷ், கரூர் வைசியா வங்கியின் இயக்குநர் சூர்ய நாராயணன், சிஇஓ சேஷாத்திரி, வி.என்.சி.நிறுவனத்தின் சேர்மன் சி.பாஸ்கர், பாரதி புத்தகாலயம் நிர்வாகி பாரதி நாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புத்தக நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொதுமக்களும் தினந்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செய லாளர் ஜான்பாட்ஷா, மாவட்ட தலைவர் தீபம் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்த னர்.