tamilnadu

img

வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் கார்


கனடாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கனடாவில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் கராஜில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் எதிர்பாராத விதமாக வெடித்து தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும்  பாதிப்பு ஏற்படவில்லை.  இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மான்ட்ரியல் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீப்பிடித்த இந்த  ஹூண்டாய் கோனாவை  மார்ச் மாதம்தான் அதன் உரிமையாளர் வாங்கியுள்ளார். சார்ஜிங் பிரச்சனையால் கூட இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், கோனாவின் பேட்டரியில் வெப்ப அழுத்தம் அதிகரித்தும் கார் வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கனடாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கோனாவில் 64.0kWh லித்தியம்-ஐயான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.

இந்த  ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்  எஸ்யூவி காரை சமீபத்தில்  முதல்வர் பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.