பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் வாந்தியெடுத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 20 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.