கர்நாடக மாநிலத்தின் பிதர் மாவட்டத்தை சார்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கர்நாடக பிதர் மாவட்டத்தை சார்ந்த 65 வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயண் ராவ் செப்டம்பர் 1 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி இன்று 4 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் இயக்குனர் மருத்துவர் மணீஷ் ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்க வில்லை என தெரிவித்துள்ளார்.