கண்ணூர், ஜுலை 30- கண்ணூர் பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் இந்திய மாணவர் சங்கம் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. 123 கவுன்சிலர்களில் 112 பேர் வாக்களித்தனர். அதில் 75 வாக்குகளை இந்திய மாணவர் சங்கம் பெற்றுள்ளது. மோராழ ஸட்ரெம்ஸ் கல்லூரி மாணவியும் எஸ்எப்ஐ மாவட்டக்குழு உறுப்பினருமான டி.கே.சிசிரா 75 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கேஎஸ்யுஇ எம்எஸ்எப் கூட்டணி வேட்டாளரான அலன் ஜோ ரெஜி 38 வாக்குகள் பெற்றார். பொதுச் செயலாளராக மூநாடு பீப்பிள்ஸ் கல்லூரி மாணவரும் எஸ்எப்ஐ காசர்கோடு மாவட்டக்குழு உறுப்பினருமான டி.கே.விஷ்ணுராஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.