குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!
ஜன. 8 பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
சென்னை, டிச. 30- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் 2020 ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூட்டம் டிசம்பர் 29 ஞாயிறன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மூ. வீரபாண்டி யன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சார்பில் மாநிலச் செயலாளர் என்.கே. நடராஜன், மத்தியக்கமிட்டி உறுப் பினர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பி னர் வி. வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கொள்ள ப்பட்ட முடிவுகள் வருமாறு:
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், அதற்கு எதிராகப் போராடுகிற மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை கண்டித்தும், மக்களின் பொருளா தார வாழ்வுரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்கு தல்களை கண்டித்தும், தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் பொதுத்துறைகளை தனியார்மய மாக்குவதை கண்டித்தும், ஜனவரி 8, 2020 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து 2020 ஜனவரி 1 முதல் 7 வரை நாடு முழுவதும் அகில இந்திய அள வில் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நடத்த வேண்டுமென இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன. தமிழகத்தில் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்எல்)லிபரேசன் சார்பில் ஜன வரி 8 அன்று நடைபெறும் அனைத்து தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தத்திற்கு தங்களது முழு ஆதர வை தெரிவித்துக் கொள்கிறது. அகில இந்திய அளவில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க த்தின் சார்பில் கிராமப்புற பந்த் நடத்து வது என்ற அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வணிகர் அமைப்புகள், சிறு-குறு தொழில் முனை வோர், மாணவர், இளைஞர், மாதர் அமைப்புகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளின் ஆதரவை, பிரச்சாரத்திற்கும், பொது வேலை நிறுத்தத்திற்கும் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2020 ஜனவரி 3முதல் 5-க்குள் ஏதாவது ஒரு நாள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மாவட்டத் தலைநகரங்களில் வேலைநிறுத்தத் திற்கு ஆதரவாக சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்.) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் அணிகளும், அனைத்து வர்க்க - வெகுஜன அமைப்பு களும், பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.