மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96 வது பிறந்த நாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் திங்களன்று (ஜூன் 3) மாலை தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித்தலைவர்கள் கே.எஸ். அழகிரி, கே.பாலகிருஷ்ணன், வைகோ, இரா.முத்தரசன், கி.வீரமணி, தொல். திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவா`ஹிருல்லா, பாரிவேந்தர், ஈஸ்வரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.