வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

ஒசூர் முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி சாவியை பறித்த ஒரு கும்பல்   25091 கிராம் நகைகள் மற்றும் 96  ஆயிரம் பணமும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;