tamilnadu

img

மின்வாரிய கேங்மேன்களுக்கு உடற்தகுதித் தேர்வு

சென்னை, டிச. 5- தமிழக மின்சாரவாரியத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட் டுள்ள கேங்மேன் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கம்பம் நடுதல், புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்வதற்காக 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, உடற்தகுதித் தேர்வு இன்று துவங்கியது. அம்பத்தூர் தொழிற்பேட்டையின் 110 கிலோ வாட் துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.