சென்னை, டிச. 30- வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க, கூடுதலாக 5 குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புல னாய்வுத் துறை (சிவில் சப்ளை சிஐடி) அலுவலகத் தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள் கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக 33 மாவட்டங்க ளில் தலா ஒரு குழு குற்றப்புல னாய்வுத் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பிரிவின் டிஜிபி பிரதீப் வி. பிலிப் உத் தரவின் பேரில் வெளிமாநி லங்களுக்கு உணவு பொருள் கள் சட்டவிரோதமாக கடத் தலை தடுக்க, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூடு தலாக 5 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தகவலை 044-2433 8973 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.