tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் சிஐடியு கருத்தரங்கம்

உளுந்தூர்பேட்டை. டிச, 31- தொழிலாளர் விரோத,  மக்கள் விரோத மத்திய  பாஜக அரசின் நடவடிக்கை களை எதிர்த்து ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த தயாரிப்பு கருத்தரங்கம் இந்திய தொழிற்சங்க மையம் சிஐ டியுவின் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமை யில் நடைபெற்ற கருத்த ரங்கில் பொருளாளர் ஏ.வீரா சாமி வரவேற்றார். சென்னை யில் ஜனவரி மாதம் நடை பெறும் சிஐடியு 16ஆவது  அகில இந்திய மாநாட்டிற்  கான நிதியை கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் அளித்தார்.  பின்னர் தொழில் வளர்ச்சி, தொழிற்சங்க உரிமை, வேலைவாய்ப்பு கோரி நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.