தென் ஆப்பிரிக்காவில், பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில், 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தபோது, குவால்வினி என்ற மலைப்பாங்கான கிராமத்தை கடந்தபோது, பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 62 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.