tamilnadu

img

கோசாலைகளை பாதுகாக்க சிசிடிவி பொருத்த உள்ளதாம் யோகி அரசு

உத்திரபிரதேசத்தில் கோசாலைகளை பாதுகாக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது 
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் மாநகராட்சியால் நடத்தப்படும் நந்தி கோசாலை அமைந்துள்ளது. அங்கிருந்த பணியாளர்கள் தீபாவளிக்காக 5 நாட்கள் விடுப்பு எடுத்தனர். இந்நிலையில் பராமரிப்பு இல்லாமல் அங்கிருந்த 123 பசுக்களில் 8 பசுக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ அனிஸ் பராஷர் அலிகர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையரான அருண் குமார் குப்தா ஆகியோர் நந்தி கோசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு உடற்கூறு ஆய்வுக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர் அருண் குமார் கூறியதாவது 
"பாலித்தீன் பைகள் உண்பதாலும் பசுக்களின் இறப்பு நேர்கிறது. உடற்கூராய்வின் முடிவுகளில் இது தெரியவரும். இருப்பினும், பசுக்களின் கூடுதல் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இந்த சிசிடிவி வசதி அலிகரில் உள்ள 161 அரசு கோசாலைகளுக்கும் அமைக்கப்பட உள்ளது. சிசிடிவி கேமரா படக்காட்சிகளை நேரடியாகக் கண்காணிக்க அவை மாநகராட்சி அதிகாரிகளின் கைப்பேசிகளில் இணைக்கப்படுகிறது.
இதன் பலனைப் பொறுத்து படிப்படியாக மாநிலம் முழுவதிலும் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாம்.
உத்தரபிரதேசத்தில் பெண்கள் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, மற்றும் கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதைக்கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காத யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 
ஏற்கனவே கடந்த  சில நாட்களுக்கு முன் பசுக்களுக்காக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் தனியாக ஒரு அமைச்சகமும் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.