tamilnadu

img

உத்தரகாண்ட்: சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை

உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதி மற்றும் மத மாற்ற திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
உத்தரகண்ட்டில் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து சாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பண ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. சாதி மறுப்பு திருமணத்தின் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு திருமண ஜோடியில் ஒருவர், பட்டியலினப் பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.சாதி மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தேசிய ஒற்றுமையின் உணர்வை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும், இதற்கு தகுதியான ஜோடிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக நலத்துறை அதிகாரி தீபன்கர் தெரிவித்தார்.