tamilnadu

img

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிர் வாக கமிட்டி தேர்தல் அக்டோபர் 22-ஆம் தேதி அன்றும், மாநில கிரிக்கெட் சங்களுக்கான செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்றும் நடைபெறுவதாகத் திட்ட மிடப்பட்டிருந்தது.  இந்த தேர்தல் விவகா ரத்தில் தமிழக கிரிக்கெட் சங்கத்தில் மட்டும் விதிமுறை காரணமாகச் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச பதவிக்காலம் 9 ஆண்டு கள் என்ற கோரிக்கைகளை  முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான தேர்தல் மட்டும் தள்ளிப்போகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விதி முறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வியாழனன்று உத்தர விட்டது.  ஆனால் தேர்தல் இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் அந்த முடிவை உச்சநீதிமன்றம்தான் இறுதி முடிவு செய்யும் என்பது பொருள்