மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது
இது தொடர்பாக மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அதில், வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.
இது தொடர்பாக முறையான விசாரணை நடைப்பெறவில்லை என்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்