tamilnadu

img

ஓமன் புதிய மன்னராக ஹைதம் பின் தாரிக் பதவியேற்பு

ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் மறைவைத்தொடர்ந்து ஹைதம் பின் தாரிக் பதவியேற்றார்.
 ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் கடந்த 1970 ஆம் ஆண்டு தனது தந்தையை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அரியணையில் ஏறியவர். இவரது ஆட்சிக் காலத்தில் ஓமனில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 79 வயதான காபூஸ் பி சைத் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார்.  இந்நிலையில் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்ததாக ஓமன் அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஓமனின் புதிய மன்னராக அந்தநாட்டு  கலாச்சாரத் துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிக் அல் சைத் இன்று அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் நடந்த கவுன்சிலிங் கூட்டத்தில் ஹைதம் பின் தாரிக் அல் சைத் பதவி ஏற்றுக்கொண்டார்.

;