tamilnadu

img

கடந்த 13 வருடங்களில் முதல்முறையாக குறைந்த ஸ்கூட்டர் விற்பனை

கடந்த 13 வருடங்களில் முதல்முறையாக ஸ்கூட்டர் வகை இருசக்கர வாகன விற்பனை குறைந்துள்ளது.


மக்களிடையே மிக பிரபலமாக மாறி வரும் ஸ்கூட்டர் வகை இருசக்கர வாகனப் பயன்பாடு மொத்த பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது. முக்கியமாக கடந்த சில வருடங்களில் tvs, hero மற்றும் honda ஆகிய முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்கூட்டர் வகை இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகளவில் உயர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்தாண்டு ஸ்கூட்டர் விற்பனையானது 0.3 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2017ல் சுமார் 67.2 லட்சம் ஸ்கூட்டர் வாகனங்கள் விற்பனையான நிலையில் 2018ம் ஆண்டு அது 67 லட்சமாக குறைந்துள்ளது.


இந்த சரிவு என்பது கடந்த 13 வருடங்களில் முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2006ம் ஆண்டு 1.5 சதவிகிதம் அளவிற்கு விற்பனை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;