tamilnadu

img

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் இடம் மாறுகிறது?

புதுதில்லி,ஜன.16-  பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும், அலுவலகமும் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. தில்லியில் குடியரசுத் தலை வர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கிலோமீட்டர் தூரமுள்ள பகுதி யை, புதுப்பித்து மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் புதிய நாடா ளுமன்ற கட்டிடம், பொதுவான தலைமைச் செயலகம் உள்ளிட்ட வற்றை அமைப்பது பற்றி திட்ட மிடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவரின் இல்லத்தை நார்த் பிளாக் அருகிலும், பிரதம ரின் இல்லத்தை சவுத் பிளாக்  அருகிலும் மாற்றுவது குறித்தும் திட்டமிடப்படுவதாக கூறப்படு கிறது.