செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

உலகக்கோப்பை கிரிக்கெட்

கிரிக்கெட் உலகின் மிக முக்கிய தொடரான உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் வரும் மே 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் துவங்குகிறது. கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகள் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியும் வீரர்கள் பட்டியலை வெளி யிட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் வீரர்கள் விவரம்:


குல்பதின் நபி (கேப்டன்), முகமது ஷாசாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்ஹர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஜத்ரன், ஷமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஜத்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹாசன், முஜிப் உர் ரஹ்மான்.


;