tamilnadu

img

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் தேவ் சர்மா என்ற இந்தியர் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.


ஆஸ்திரேலியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் வெண்ட்வொர்தின்(wentworthin) மாவட்டத்தில் உள்ள சிட்னி கிழக்கு சுபர்ப் தொகுதியில் போட்டியிட்ட தேவ் சர்மா என்ற இந்தியர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கெரின் பெல்ப்ஸ்க்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். தேவ் சர்மா ஆஸ்திரேலியா லிபரல் கட்சியை சார்ந்தவர்.


தேவ் சர்மா இஸ்ரேல் நாட்டில் ஆஸ்திரேலியாவின் தூதராக செயல்பட்டவர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அமைத்த கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.