அரியலூர், ஜூன் 1- மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரியலூர் கோட்ட மின் நிலைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார மத்திய அமைப்பின் கோட்டத் தலைவர் சிஐடியு காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கிருஷ்ணன், பி.சங்கர், பூங்கோதை, இன்ஜினீயர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.