tamilnadu

img

கொரோனாவால் 75000க்கும் அதிகமானோர் பலி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனாபாதிப்பால் உலகம் முழுவதும் 1351752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 287667 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உலகம் முழுவதும் 75269 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் பெல்ஜியத்தில் ஒரே நாளில் 403 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை  2035 ஆன உயர்ந்துள்ளது
இதைத்தொர்ந்து  ஜப்பான் தலைநகர் டோக்கியோ, உள்ளிட்ட 6மாகாணங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுதத அடுத்த ஒரு மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.