tamilnadu

img

கூகுள் மேப்பை நம்பி சகதியில் சிக்கிய கார்கள் 

அமெரிக்காவில் கூகுள் மேப்பை நம்பி பாதையை மாற்றிய ஓட்டுநர்கள் சகதியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இன்றைய சூழலில் பலரும் புதிய இடங்களுக்கு செல்லும் போது கூகுள் மேப்பை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில்  கொலரேடோவில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கான சென்று கொண்டிருந்த ஓட்டுநர் கோன்னீ என்பவருக்கு கூகுள் மேப் டீ-டூர் எனும் பெயரில் மாற்று வழி இருப்பதாகக் கூறி அறிவுறுத்தியது. அதில் 43 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு 23 நிமிடங்களில் சென்று விடலாம் எனக் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓட்டுநர் கோன்னீ தனது பாதையை மாற்றினார். சற்று நேரத்தில் பொது வழியற்ற தனியார் சாலையில் தன்னைப் போன்றே பாதையை மாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வாகனங்கள் சகதியில் மாட்டிக் கொண்டது தெரியவந்தது.  சகதியில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப் பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் தவித்தது தெரியவந்துள்ளது.