tamilnadu

img

டிரம்பை கிண்டல் செய்த கிரோட்டா தன்பெர்க்

அமெரிக்க அதிபர் டிரம்பை கிண்டல் செய்துள்ள கிரேட்டா தன்பெர்க்கின் ட்விட்  உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். ஐ.நாவின் பருவநிலை மாநாட்டில் பேசிய கிரேட்டா இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை எனது குழந்தை பருவத்தை களவாடி விட்டீர்கள். இவ்வளவு காலமாக பருவநிலை மாற்றத்தை உணர்ந்து செயல்படாமல் இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கோபம் கலந்த கண்ணீருடன் ஆக்ரோஷமாக பேசினார். கடந்த தலைமுறை செய்த தவறுகளை இந்த தலைமுறையினர் அனுபவித்து வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றம் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அழகான வார்த்தைகளை பேசி வருகிறார்களே தவிர அவர்களின் நோக்கம் வேறாக உள்ளது என உலக நாடுகளின் தலைவர்கள் கர்ஜித்தார்..  
இதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பை கோபத்துடன் பார்த்த  கிரேட்டாவின் படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து  2019ல் கிரேட்டா டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்று இருந்தார். 

இந்நிலையில் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிக மோசம் . கிரேட்டா தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் அதன் பின் அவர் தனது நண்பர்களுடன் பழைய படம் ஒன்றுக்கு செல்ல வேண்டும் சில் கிரேட்டா சில் !"  என்று கிண்டல் செய்திருந்தார். 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் முன்னிலையில் உள்ள சூழலில் ஸ்டாப் தி கவுண்ட் என்று  தபால் வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என டிரம்ப் கோபமாக ட்விட் செய்திருந்தார்.  
இதைத்தொடர்ந்து டிரம்பின் ட்விட்டை ரீ ட்விட் செய்த கிரேட்டா மிக மோசம், டொனால்ட் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் அவர் தனது நண்பர்களுடன் பழைய படம் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.. சில் டொனால்ட் சில்!, என்று கிரேட்டா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
சிறுமி கிரேட்டாவின் இந்த விமர்சனம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.