ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு செய்துள்ள நிலையில், பிவானி தொகுதியின் சிபிஎம் வேட்பாளர் ஓம்பிரகாஷ் புதனன்று தனனா கிராமத்தில் வாக்குச் சேகரித்தார். சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஓம்பிரகாஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து ஆதரவை வழங்கினர்.