states

img

பீமா-கோரேகான் போரின் 205-ஆவது ஆண்டு நிறைவு

மும்பை, ஜன.1- பீமா-கோரேகான் போரின் 205-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் ஞாயி றன்று ஏராளமானோர் திரண்டனர்.  1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம்  தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக் கும் மராத்தா கூட்டமைப்பின் பேஷ்வா  பிரிவினருக்கும் இடையே நடந்த போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு கோரேகான் பீமா கிராமத்திற்குச் செல்ல ஏராளமான மக்கள் கடந்த 2018- ஆம் ஆண்டு கூடினர். இந்த விழா விற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறி யர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட னர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

இந்துத்துவா கூட்டத்தின் வெறிச் செயல்

இந்த வன்முறையின் பின்னணியில் இந்துத்துவா வெறியர்களான மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே  ஆகியோர் இருந்ததாக அமைப்புகளின் தலித் தலைவர்கள் குற்றம்சாட்டினர். அன்றைய ஆளும் பாஜக அரசோ,  சாதி வெறியர்களை கைது செய்யாமல்,  விழாவில் கலந்து கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள், மனித உரி மைச் செயற்பாட்டாளர்களை கைது செய்து உபா சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2018-ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஹைதரா பாத்தில் கைது செய்யப்பட்ட, கவிஞர்  பி.வரவரராவுக்கு 2022-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கைது செய்யப்பட்டவர்களில் பாதிரி யார் ஸ்டான் சுவாமி தனது 83- ஆவது வயதில் ஜாமீனே கிடைக்காமல் சிறையிலேயே 2021-ஆம் ஆண்டு மரணமடைந்தார். சுதா பரத்வாஜூக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனந்த் டெல்டும்டே

மற்றொரு சமூக ஆர்வலரான நவ்லகா, அரசாங்கத்தை கவிழ்க்க சதி  செய்ததாகக் கூறி அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும் டேவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் 2022 நவம்பர் 18 அன்று ஜாமீன் வழங்கி யது. ஆனந்த் டெல்டும்டே, டாக்டர் அம்பேத்கரின் பேத்தியான ரமாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோனா வில்சன் மீது போலி ஆதா ரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வழக்கிற்கு எதிராக ரோனா வில்ச னின் வழக்கறிஞர்கள் மும்பை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

அம்பலமாகி நிற்கும் பாஜக

இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு  முதல் 2019- ஆம் ஆண்டு வரையி லான ஸ்டான்சுவாமியின் கணினியை  ஆய்வு செய்ததன் அடிப்படையில் மாவோயிஸ்ட்களால் எழுதப்பட்ட தாகக் கூறப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனமான ஆர்செனல் கன்சல்டிங் அறிக்கை வெளியிட்டது. இத்தகைய பின்னணியில், தற்போது பீமா-கோரேகான் போரின் 205-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜெய் ஸ்தம்பில் மக்கள் கூடியுள்ளனர்.