states

img

மணிப்பூரில் இன்று மறுவாக்குப்பதிவு - 11 மணி நிலவரம்

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 37.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 
மணிப்பூர் மாநிலத்தில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 தொகுதிகளிலும் கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி தமான்போக்பி, ஹிரோய் ஷம்பா, மொய்ராங்காம்பு, சஜேப் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. துணை ராணுவப்படை பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது.
அதன்படி காலை 11 மணி நிலவரப்படி, 11 வாக்குச்சாவடிகளில் 37.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

;