states

img

சொந்த சாதிக்குள் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம்... அகமண முறையை ஊட்டி வளர்க்கும் கர்நாடக பாஜக அரசு....

பெங்களூரு:
இந்திய சமூகத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் சாதி தடையாக இருக்கிறது. இந்த சாதியக் கட்டமைப்பு உடையாமல், உலக அரங்கில் இந்தியா தலைமைஇடத்தைப் பெற முடியாது என்பது, இந்தியாவின் பல்வேறு சீர்த்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்களின் கருத்தாகும். இதற்கான நீண்ட நெடிய போராட்டங் களையும் நடத்திய அவர்கள், எவ்வளவு முயன்றாலும், சாதியக் கட்டமைப்பு இப்போதும் உடைபடாமல் நீடிப்பதற்கு, சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் எனப்படும் ‘அகமண முறை’, ஒரு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். அந்தஅடிப்படையில், அகமண முறை உடைபட்டு, சாதி கடந்த காதல் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர்.

அதனடிப்படையிலேயே சாதி கடந்ததிருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கி வருகின்றன.இந்நிலையில், கர்நாடக மாநில பாஜகஅரசு விதிவிலக்காக, பிராமணப் பெண் கள் சொந்த சாதிக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.அதாவது, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப் படும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத் திற்கு ‘மைத்ரேயி திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அகமண முறையை ஊக்கப்படுத்தி, சாதியை மேலும் இறுக்கமாக்கும் முயற்சிஇது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக, பொருளாதார ரீதியாக முன் னேறியுள்ள பிராமண சமூகத்துக்கு இந்தநிதியுதவி கொடுப்பதற்கான தேவை என்ன, சாதிக்கு எதிராக அரசு செயல்படாமல் சாதிக்குள் திருமணம் செய்துகொண் டால் நிதியுதவி என்று அரசாங்கமே சொல்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.திருமணம் என்பது தனிப்பட்ட இருவரின் தேர்வாகும், இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பிற்போக்குத்தனமானது மட்டுமன்றி பெண் சுதந்திரத்திற்கு எதிரானது. கர்நாடக பிராமண மேம்பாட்டு வாரியமானது, பிராமணப் பெண்களுக்கு உதவ வேண்டும்என்றால் அவர்கள் தொழில் துவங்குவதற்கு கடன் கொடுக்கலாம். ஏழை பிராமண பெண்களின் கல்விக்கு நிதியளிக்கலாம். அதையெல்லாம் விடுத்து இவ்வாறான ஒரு புதிய திட்டத்தை பிராமண மேம் பாட்டு வாரியம் கொண்டு வந்திருப்பது கேலிக்குரியது என்று காங்கிரஸ் இளைஞர் பிரிவின் தேசிய பிரச்சாரத் தலைவர் ஒய்.பி.ஸ்ரீவத்சா கண்டித்துள்ளார்.பிராமணப் பெண்களின் திருமண நிதியுதவிக்கு என்று தனியாக ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கும் ‘அருந்ததி’ என்ற திட்டத்தையும் கர்நாடக பாஜக அரசு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;