states

விஷவாயு தாக்கி ஐந்து பேர் பலி

பெங்களூரு, ஏப்.18- கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஸ்ரீஉல்கா என்ற மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இது மும்பையைச் சேர்ந்த ராஜூ என்பவருக்குச் சொந்தமானது. இங்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் திங்களன்று இரவு மீன்களை சுத்தம் செய்த பிறகு அதன் கழிவுகளைச் சேகரித்து வைக்கும் தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து இவரை காப்பற்ற சென்ற ஏழு பேர் உட்பட எட்டுப் பேரும் மயக்கம் அடைந்தனர். தகவலறிந்து  வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களை மீட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த மேற்கு வங்கத்தைச்  சேர்ந்த முஹம்மது ஷமீருல்லா இஸ்லாம்,  உமர் பாரூக், நிஜாமுதீன் அலிஸ், மிராசுல்  இஸ்லாம், ஷரபத் ஆகியோர் உயிரிழந்தனர். மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.