states

img

வனங்களில் வசிக்கும் தலித்துகள்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? - பி.ஆர். நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

வனங்களில் வசிக்கும் தலித்துகள்/பழங்குடியினரை பாரம்பர்ய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கலை வடிவங்கள் மூலமாகவும் மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், வனங்களில் வசிக்கும் தலித்துகள்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பாரம்பர்ய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கலை வடிவங்கள் மூலமாகவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய கலைச்சார மற்றும் சுற்றுலா இணை அமைச்சர், பிரகலாத் சிங் பட்டேல், தலித்துகள்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் அதன்கீழ் இயங்கிடும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம், கலாசேத்திரா ஃபவுண்டேஷன், லலித் கலா அகாடமி மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எனினும் இதற்காக குறிப்பிட்டு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

(ந.நி.)

 

;